இந்த வலைப்பதிவில் தேடு

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் Smart Board!

வியாழன், 28 மார்ச், 2024

 




அனைத்து தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் இணைந்து அனைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி இருக்கும் வகையில் திட்டமிட்டு மடிக்கணினிகளை நாளை மாலை 5 மணிக்குள் வழங்கிவிட்டு அதற்கான அறிக்கையை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டுகள் வந்து சேர்ந்துவிடும். அவற்றை முறையாக பெற்று ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்பட உள்ள வகுப்பறையில் அவற்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏதுவான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது மட்டுமன்றி அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான கணினிகள் மற்றும் இதர சாதனங்கள் எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனுப்பப்படும் அவற்றையும் முறையாக பெற்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அவற்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் சிறப்பான முறையில் திட்டமிட்ட வகையில் இயங்குவதற்கு இணைய இணைப்பு மிகவும் அவசியமானது.


தலைமையிடத்திலிருந்து இணைய இணைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி பெறப்பட்டு விட்டது.


அதை முறையாக பயன்படுத்தி இணைய இணைப்புகளை உடனடியாக பெற்று அதற்கான ஆவணங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் முழுக்க முழுக்க இணைய இணைப்பை நம்பியே உள்ளன.


எனவே தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு போதுமான அறிவுரைகளை வழங்கி அனைத்து பள்ளிகளும் இணைய இணைப்பினை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் பெற்று விட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*தொடக்கக் கல்வி இயக்குனர் இதை உன்னிப்பாக கண்காணித்து ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் நல்ல முறையில் முடித்து எதிர்வரும் கல்வி ஆண்டில் ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை அரசு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*இப்பணியில் சுணக்கம் காண்பிக்கும் தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடக்க கல்வியை இயக்குனரை கேட்டுக் கொள்ளப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent