இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சம் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

 



அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தைக் கடந்தது. இன்று மாலை நிலவரப்படி 3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 92.29% மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. 


இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது.


அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும்? அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்த வகையில் கடந்த 1ம் தேதி முதல் இன்றுவரை அரசு பள்ளிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இலக்கான 5 லட்சத்தை எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent