இந்த வலைப்பதிவில் தேடு

தேர்வு தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்கள் 4 பேருக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

 





உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் என்று மட்டும் எழுதிய மாணவர்கள் 4 பேருக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய பேராசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.


உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறை டிப்ளமோ படிப்பிற்கான தேர்வு நடைபெற்றது. 



இந்த தேர்வினை எழுதிய மாணவர்களில் 4 பேர் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்றும் சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை மட்டுமே எழுதி இருந்தனர். தேர்வுக்கு பின் விடைத் தாள்களை திருத்திய பேராசிரியர்கள் 2 பேர் அனைத்து கேள்விகளுக்கும் ஜெய் ஸ்ரீராம் என பதில் எழுதி இருந்த மாணவர்களுக்கு தலா 50% மதிப்பெண்கள் வழங்கி தேர்வு பெற வைத்தனர்.



இதனிடையே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சந்தேகத்தின் பெயரில் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மாநில ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆனந்தி பென்னிடம் புகார் அளித்தார். 


இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,ஜெய்ஸ்ரீராம் மற்றும் சில கிரிக்கெட் நட்சத்திரங்களின் பெயர்களை விடைத்தாள்களில் எழுதி இருந்த 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்கள் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட மறு தேர்வில் 4 மாணவர்கள் பூஜ்யம் மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து, முன்னர் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் 2 பேரை பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent