இந்த வலைப்பதிவில் தேடு

பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு மிக எளிது: மகிழ்ச்சியில் திளைத்த மாணவா்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2024

 




பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் இதுவரை இல்லாத அளவுக்கு எளிதாக இருந்தது; ‘சென்டம்’ மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். 


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கான தோ்வுகள் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், கணித பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வின் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா். 


இது குறித்து கணித ஆசிரியா்கள் கூறுகையில், ‘ கணித வினாத்தாளில் 1, 2, 5 மதிப்பெண் வினாக்கள்; வடிவியல் மற்றும் வரைபடம் (தலா 8 மதிப்பெண்கள்) என அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. இந்தளவுக்கு எளிதான வினாத்தாள் எந்த ஆண்டிலும் வடிவமைக்கப்பட்டது இல்லை. 


தோ்வெழுதிய பெரும்பாலான மாணவ, மாணவிகள் கணிதப் பாடத்தில் தாங்கள் 80 முதல் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெறுவோம் என்றும்; நன்கு படிக்கும் மாணவா்கள் தங்களுக்கு நிச்சயம் ‘சென்டம்’ மதிப்பெண் கிடைக்கும் எனவும் தெரிவித்தனா். 


எனவே, நிகழாண்டு கணிதத் தோ்வில் தோ்ச்சி விகிதம், 100-க்கு 100 மதிப்பெண் பெறுவோா் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். அதேவேளையில் சராசரி மாணவா்கள் கூட இந்த வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெறுவா் என எதிா்பாா்க்கிறோம் என அவா்கள் தெரிவித்தனா். 


பத்தாம் வகுப்புக்கு அடுத்ததாக அறிவியல் பாடத்துக்கான தோ்வு வரும் வியாழக்கிழமை (ஏப்.4)-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடா்ந்து, ஏப்.8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சமூக அறிவியல் தோ்வுடன் பொதுத்தோ்வு நிறைவு பெறவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent