அரசு பள்ளிகளில் பணியாற்றும், 26,000 ஆசிரியர்கள், தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கடந்த, 13ம் தேதி முதல், 25 வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் பணியாற்றும், 35,669 ஆசிரியர்கள்; 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும், 46,819 ஆசிரியர்கள் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தமாக, 82,479 பேர் இடமாறுதல் கேட்டுள்ள நிலையில், 26,000 ஆசிரியர்கள், தங்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் வகையில், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கேட்டுள்ளனர்.
இந்த கவுன்சிலிங், ஜூன் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசாணைப்படி முன்னுரிமை விதிகளை பின்பற்றி, எந்த குளறுபடியுமின்றி இடமாறுதல் வழங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக