இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - நிபந்தனை ரத்து

ஞாயிறு, 19 மே, 2024

 

:அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான நிபந்தனை தளர்த்தப்பட்டு உள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். வழக்கமாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கவுன்சிலிங் நடக்கும்.



பள்ளிகள் திறக்கப்பட்டு, மூன்று மாதங்கள் முடிந்த பின், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, பெற்றோர் புகார் தெரிவித்தனர்.


இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படும் முன்பே இடமாறுதல் பணிகளை முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்கூட்டியே ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.


இதன்படி, இன்று மாலைக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை காரணமாக, வரும் 25ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



'கவுன்சிலிங் நாள் பின் னர் அறிவிக்கப்படும். பொது மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க, தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில், ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைப்பிடிக்க தேவையில்லை' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பால், அனைத்து ஆசிரியர்களும் மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent