இந்த வலைப்பதிவில் தேடு

தொலைதூர கல்வி படிப்புகளுக்கு இணையவழி சேர்க்கை : இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

புதன், 22 மே, 2024

 





இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது.



கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல், தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைசேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.



இக்னோ பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர https://ignouiop.samarth.edu.inhttps://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent