இந்த வலைப்பதிவில் தேடு

இன்றைய ராசிப்பலன் (18.06.2024)

செவ்வாய், 18 ஜூன், 2024

 



மேஷம்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் செயல்பாடு முன்னேற்றத்தை தரும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயத்தில் நல்ல பலனை பெறலாம். வாழ்க்கைத் துணையின் ஆதரவு, உங்களின் இலக்கை அடைய உதவும். தந்தையின் ஆசியும், ஆதரவும் கிடைக்கும். குடும்ப தொழில் தொடர்பான விஷயத்தில் லாபம் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்று உடல் பாதைகள் தீரும்.


ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகள் இன்று பணம் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். பணியாளர் தினங்களில் கவனம் தேவை. போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் இந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்வீர்கள். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இதயத்தில் தடுமாற்றம் ஏற்படும்.


மிதுனம் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பேச்சு, நடக்கையில் கவனம் தேவை. நிதிநிலை தொடர்பாக கவனமாக முடிவெடுக்கவும். இல்லை எனில் தேவையற்ற நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தொழில் தொடங்குவதற்கான புதிய வழிகள் கிடைக்கும். உங்களின் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள். இன்று எந்த ஒரு முடிவையும் விவேகத்துடன் இருப்பீர்கள். குடும்பச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலக பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். புதிய கிடைக்க வாய்ப்புள்ளது. பொருள் வசதிகள் அதிகரிக்கும். உங்கள் எதிரிகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். இன்று உங்களின் மகிழ்ச்சியும், ஆளுமையும் அதிகரிக்கும். அரசியலில் உங்கள் அபிமானிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.


சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவில் சிறப்பு கவனம் தேவை. உறவுகளில் இருந்த மனக்கசப்பு நீங்க மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணியிடத்தில் புதிய வேலைகளை தொடங்கும் சரியான திட்டமிடல் அவசியம். இன்று மனம் மற்றும் உடல் சோர்வு அதிகரிக்கும்.


கன்னி 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.


துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டு பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் வார்த்தையில் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் உண்டு. இன்று வண்டி வாகனங்களில் கவனம் தேவை. சிலருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.


விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் புதிய தொடக்கம் இருக்கும். இன்று உங்கள் உறவுகளில் புரிதல் சிறப்பாக இருக்கும். சிலரிடம் கூட்டாக செய்யக்கூடிய வேலையில் கவனம் தேவை. வீண் மனவருத்தம் ஏற்படும். பிள்ளைகளின் செயல் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மரியாதையையும் அதிகரிக்கும். இன்று விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.


தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வேலை சார்ந்த விஷயத்தில் தடைகள் நீங்கும். பயணங்கள் உங்களுக்கு அனுகூல பலனைத் தரும். உங்களின் கடின உழைப்பால் விருப்பங்கள் நிறைவேறும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் என புதிய உறுப்பினர் வருகையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்தில் உள்ள சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். இன்று உங்களின் மனம் அமைதியும், மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று கவனத்துடன் செயல்படுங்கள். இன்று சந்திரனின் வலுவான அமைப்பானது மூதாதையர்களிடமிருந்து உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.


கும்பம் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் இளைய சகோதரர், குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் எதிர்காலத்திற்காக சில சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்வீர்கள். வணிக வர்க்கத்தினர் புதிய திட்டங்களால் நல்ல பலன் அடைவீர்கள்.


நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியால் உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய நல்ல நண்பர்களையும் பெறுவீர்கள். வேலையில் ஒரு பிஸியான நாளாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் புரிதல் சிற்பபாக இருக்கும்.


மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமாக தகராறு தீரும். குடும்ப பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. இன்று குடும்பத் தொழிலில் உங்கள் தந்தையின் வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவியால் மாணவர்களின் ஞாபக சக்தி வளரும். தாய்வழி தாத்தாவிடம் மரியாதை கிடைக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent