இந்த வலைப்பதிவில் தேடு

சாதாரண காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் - 10 எளிய குறிப்புகள்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

 




தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.

தண்ணீர் மாறுபாட்டினால், காலநிலை மாறுபாட்டினால் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக, சளி, இருமல், காய்ச்சல் போன்ற சாதாரணமாக வரும் பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவம் கைகொடுக்கிறது. இந்த நோய்களுக்கான எளிய சித்த மருத்துவ குறிப்புகளை பார்ப்போம்.


1. நிலவேம்பு கசாயம்: பெரியவர்கள் -60 மிலி இருவேளை. சிறுவர்கள்-15 -30 மிலி இருவேளை . குழந்தைகள் -10-15 மிலி வீதம் ஏழு நாட்கள் எடுக்க வேண்டும்.


2. திரிகடுகு சூரணம்-1 கிராம், லிங்கச் செந்தூரம்-100-200 மிகி, சிவனார் அமிர்தம்-200 மிகி இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.


3. தொண்டை வலி, கரகரப்பு, குரற்கம்மல் இருந்தால் தாளிசாதி வடகம்-1-2 மாத்திரை மூன்று வேளை கடித்து சாப்பிட வேண்டும், ஒரு டம்ளர் வெந்நீர் அருந்துவது நல்லது.


4. தலைவலி இருந்தால் நீர்க்கோவை மாத்திரையை வெந்நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் போட வேண்டும்.


5. இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு -5 முதல் 10 மிலி, இரண்டு முதல் மூன்று வேளை குடிக்க வேண்டும்.


6. பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.


7. முட்டையை அரை வேக்காட்டாக்கி அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம், உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.


8. தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.


9. குடிப்பதற்கு, குளிப்பதற்கு இள வெது வெதுப்பான வெந்நீரை பயன்படுத்த வேண்டும்.


10. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது நல்லது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent