தமிழகத்தில் ஆடி கிருத்திகை விழாவானது வருகிற 29- ந் தேதி தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆறுபடை வீடுகளான முருகன் கோவில்களில் மிகவும் விமரிசையாக வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேர்த்திக்கடன்கள் மற்றும் விரதமிருந்து சாமியை வழிபாடு செய்வார்கள். எனவே ஜூலை 29-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக