இந்த வலைப்பதிவில் தேடு

எதிர்பாரா அளவு குறைந்த தங்கம் விலை - நகை வாங்க சரியான டைம் வந்துடுச்சு

வெள்ளி, 26 ஜூலை, 2024

 




மக்களவையில் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது.  அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனையானது.


தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,490 -க்கும், சவரனுக்கு 480 குறைந்து ரூ.51,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  அதைபோல், வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.   பின்னர் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430 -க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 51,440 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிலையில்,  இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.  அதன்படி, சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415 -க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.89 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அந்த வகையில், தங்கம் விலை 4 நாட்களில் சவரனுக்கு ரூ.3,280 குறைந்துள்ளது.  தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent