இந்த வலைப்பதிவில் தேடு

உடற்கல்வி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை

சனி, 6 ஜூலை, 2024

 




அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள உடற்கல்வி உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.


அதன்படி 700-க்கும் கீழ் உள்ள மாணவர்கள் இருந்தால் ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளிகளில் 700-க்கும் மேல் மாணவர்கள் இருந்தால் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் 701 முதல் 1,500 வரை மாணவர்கள் இருந்தால் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர், 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குநர், 2 உடற்கல்வி ஆசிரியர்கள் என்றவாறு பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த எண்ணிக்கையின்படி பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை பணிநிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பணிநிரவல் கலந்தாய்வு மூலம் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாறுதல் செய்தாக வேண்டும்.


வழிகாட்டுதல்கள் வெளியீடு: அதன் விவரங்களை எமிஸ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான உபரி பணியிடங்களை கண்டறிதல், பணிநிரவல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை, காலிப்பணியிடங்களை சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி கலந்தாய்வை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent