டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார். புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க அதிக மரங்களை நடவேண்டு என கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக