வெற்றிலையின் மருத்துவ குணங்கள் அபரிமிதமானது.. அதேசமயம், ஆன்மீகத்திலும் வெற்றிலைக்கான மகத்துவம் பெருகியபடியே உள்ளது..
குறிப்பாக வெற்றிலை பரிகாரம் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.
எப்போதுமே வீட்டில் மனநிம்மதி குறைந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் வறுமை பீடித்தாலோ, இதற்கெல்லாம் வெற்றிலை தீர்வை தருகிறது.
வெற்றிலை: அதாவது, வெற்றிலையை வாங்கி, அதை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து, வீட்டின் வாசலிலேயே தொங்கவிட வேண்டுமாம்.. இதனால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த இலையை காய்ந்து அப்படியே விடக்கூடாது.. உடனே இதை எடுத்துவிட்டு, புதிய இலையை அதுபோலவே தொங்கவிட வேண்டும்.
அதேபோல, காசு வைத்து வெற்றிலையில் பரிகாரம் செய்யலாம்.. அதாவது கடையில் 10 ரூபாய் நோட்டை தந்து வெற்றிலை வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டும்.
ஒற்றை இலக்கம்: இதனை வீட்டிற்குள் வைத்து, எத்தனை வெற்றிலைகள் உள்ளன என்று எண்ணி பார்க்க வேண்டும். ஒற்றைப்படையில் வெற்றிலை வந்தால், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுமே வெற்றியை தருமாம். இரட்டைப்படையில் வெற்றிலை உங்கள் கைக்கு வந்தால், எந்த காரியம் செய்தாலும் அது தடைப்பட்டு கொண்டே இருக்குமாம்.
ஒருவேளை இரட்டை இலக்க வெற்றிலைகள் உங்களது கைக்கு வந்துவிட்டால், அதிலிருந்து ஏதாவது ஒரு வெற்றிலை எடுத்து, அதில் 3 மிளகு வைத்து சுருட்டி, நூலில் கட்டி பூஜை அறையில் வைத்துவிட்டால் போதும்.. எந்த செயலை தொடங்கும்போதும், பிரார்த்தனை செய்ய வேண்டும். 3 நாள் கழித்து, அந்த வெற்றிலையை எடுத்து ஏதாவது நீர்நிலைகளில் அல்லது ஒதுக்குப்புறங்களில் போட்டுவிட வேண்டும். இதற்கு பிறகு நீங்கள் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றியை தரும் என்கிறார்கள்.
தாம்பூல தட்டு: அதேபோல, ஒரு தாம்பூல தட்டின்மீது ஒரே ஒரு வெற்றிலையும், அதன்மீது பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும்.. பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது, எந்த கோரிக்கை வைத்தாலும் அது நிறைவேறிவிடும். இதனை தினந்தோறும் செய்யலாம்.
அதேபோல, புதன்கிழமைகளில், விநாயகப் பெருமானின் கோவிலுக்கு சென்று, வெற்றிலை, ஏலக்காய் சேர்த்து தர்ப்பணம் செய்தால், உங்களுக்கிருக்கும் தடைகள் அத்தனையும் நீங்கிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக