இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகளில் வசதி இருக்கா? EMIS - ல் தகவல் சேகரிப்பு!

திங்கள், 1 ஜூலை, 2024

 



அரசு பள்ளிகளில், வகுப்பறை, ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, எமிஸ் தளத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.


தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், பல்வேறு துறைகளின் கீழ், 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 20,000 பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கின் கீழ், இணையதள இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், ஹைடெக் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வகுப்பறை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான பள்ளிகளில், குடிநீர் வசதி, கழிப்பறை, அறிவியல் ஆய்வகங்கள், நுாலகங்கள், தேவையான வகுப்பறை கட்டடங்கள், அலுவலக அறைகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழல் உள்ளது.


இவற்றை சரிசெய்தால் தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பள்ளிகளை மேம்படுத்தும் போது, அவை மாணவர்களுக்கு பலனளிக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர். எனவே, அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள் எங்கெங்கே உள்ளன; ஒவ்வொரு பள்ளியிலும் தேவைப்படும் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகள் என்னென்ன; மாணவர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விபரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எமிஸ் தளத்தில் சேகரித்துள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஒவ்வொரு முறையும், அடிப்படை வசதிகள் குறித்து, பள்ளிகளில் கணக்கெடுக்கும் போது, அதை தலைமை ஆசிரியர்கள் பலர் சரியாக வழங்குவதில்லை. கோப்புகள் வழியாக அடிப்படை வசதியை கணக்கிட்டாலும், அதில், பல அம்சங்கள் விடுபடுகின்றன. மீண்டும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


எனவே, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை, எமிஸ் தளத்தில் ஒளிவு மறைவின்றி பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்வழியே, அரசிடம் தேவையான நிதி கோரப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent