தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் இளநிலை பட்டப் படிப்பில், முதன்மை பாடங்கள் மட்டுமின்றி, பாடத்தொகுப்பு சாராத பிற பாடங்களையும் விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும்.
இதற்கு, 'கிரெடிட்' என்ற கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண், மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், கிரேடு மற்றும் தரவரிசையில் கணக்கில் எடுக்கப்படும். இந்த வகையில், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரி மாணவர்கள் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என, பல்கலை மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
'கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டும், இந்த விருப்பப் பாடத்தை தேர்வு செய்யலாம். பிரதான மதிப்பெண் பட்டியலில், விருப்பப் பாட கிரெடிட் மதிப்பெண்ணையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக