இந்த வலைப்பதிவில் தேடு

Spam Phone Call வராமல் தடுக்க உங்க மொபைலில் சிம்பிளாக இதை செய்தாலே போதும்

திங்கள், 15 ஜூலை, 2024

 




மொபைல் போன்களின் பயன்பாடு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டதுடன், அவை இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்று கூறுமளவுக்கு நம்முடைய 3வது கை போன்றாகிவிட்டன மொபைல் போன்கள்.


போன் கால்களில் தொடங்கி பணப் பறிமாற்றம் முதல் பல தேவைகளுக்கும் நாம் மொபைலின் உதவியை நாடுகிறோம்.


மொபைல் போன் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்னை என்றால் அது அறிமுகமில்லாத அல்லது தேவையில்லாத நபர்களிடம் இருந்து வரும் மொபைல் அழைப்புகள் தான். பல தேவைகளுக்காகவும், நம்முடைய மொபைல் எண்ணை பல்வேறு தளங்களிலும் பயன்படுத்துவதால் சில தேவையில்லாத சிக்கல்களும் நம்மை நாடி வந்துவிடுகின்றன. அந்த வகையில் பொருட்கள் விற்பனைக்காகவும், ஆட்டோமேடிக் டெலி காலிங், ரேட்டிங் தொடர்பான அழைப்புகள் என மார்க்கெட்டிங் துறை சார்ந்த அறிமுகமில்லாத நபர்கள் அல்லது எண்களில் இருந்து நமக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.


இதையும் படிங்க: 50+ ஆண்களிடம் திருமண மோசடி? தலைமறைவாக இருந்த சந்தியா பற்றி வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..


நாள்தோறும் இவ்விதமான Spam கால்கள் வருவது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற அழைப்புகள் பல நேரங்களில் தொந்தரவாகவே அமைகிறது. இது போன்ற ஸ்பேம் (Spam Calls) கால்களை தடுப்பதற்கு நம்முடைய மொபைலில் சில செட்டிங்ஸ்-களை மாற்றி அமைத்தாலே போதுமானது என்பதை பலரும் அறிவதில்லை.


ஆண்டிராய்டு மற்றும் ஐபோன்களில் ஸ்பேம் கால்களை தடுப்பது எப்படி என தற்போது அறியலாம்..


ஸ்பேம் கால்களை தவிர்ப்பதற்கு பலரும் ட்ரூகாலர் (TrueCaller) ஆப்பை தான் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களிலும் Built-In அம்சமாகவே ஸ்பேம் கால்களை தடுப்பதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.


ஐபோன்:


ஐபோன்களில் ஸ்பேம் கால்களை தடுக்க வேண்டுமெனில் ட்ருகாலர் ஆப்பை முதலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் Settings-ல் phone > call blocking and identification > toggle all four options என வரிசையாக தேர்வு செய்து கொள்ளவும்.


தற்போது ட்ரூகாலர் ஆப்பை ஓபன் செய்து ஸ்பேன் டிடெக்‌ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்னர், ட்ரூகாலர் ஆப்பானது தன்னுடைய டேடா பேஸில் ஒப்பிட்டு ஸ்பேம் கால்களை பிளாக் செய்துவிடும்.


ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு போனில் கூகுள் டயலர் ஆப் இருந்தால், அந்த ஆப்பை ஓபன் செய்து மேலிலிருக்கும் வலது மூலையில் உள்ள மூண்டு கோடுகளை க்ளிக் செய்து settings > caller ID and spam > and enable filter spam calls என வரிசையாக தேர்வு செய்யவும். இதன் மூலம் தேவையில்லாத கால்கள் தவிர்க்கப்படும்.


சாம்சங் போன்:


நீங்கள் சாம்சங் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் settings > and enable block spam and spam calls என தேர்வு செய்து ஸ்பேம் கால்களை தவிர்க்கலாம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent