இந்த வலைப்பதிவில் தேடு

நடுவழியில் இறக்கி விட்ருவாங்க - Waiting Ticket விதியை கடுமையாக்கிய ரயில்வே

புதன், 17 ஜூலை, 2024

 



ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமின்றி சாதாரண டிக்கெட் வைத்திருந்த பயணிகளும் ஏறி ஆக்கிரமித்த நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.


இந்த சூழலில், ரயில்வே நிர்வாகம் விதிகளை கடுமையாக பின்பற்ற TTE-க்களை அறிவுறுத்தியுள்ளதாம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.


இந்தியாவில் தினமும் பல கோடிக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக ரயில்வே உள்ளது. பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் வசதி படைத்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரயில்களில் தான் பயணம் செய்ய விரும்புவார்கள். அனைத்து தரப்பு மக்களின் முதல் சாய்ஸாக ரயில் இருப்பதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.


ரயில் பயணம்: தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் கிட்டத்தட்ட விற்று தீர்ந்து விடும். கடைசி நேரத்தில் பிளான் பண்ணுபவர்கள் தட்கல் டிக்கெட்டை எடுக்க முயற்சித்து பார்ப்பார்கள். ஆனால், சில வினாடிகளில் இந்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும். அதிலும் பண்டிகை நாட்களை பற்றி சொல்லவே வேண்டாம்.


ரயிலில் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தான் இந்த நிலை என்றால், சமீப காலமாக ரிசர்வ்ட் பெட்டிகளுக்குள்ளும் பயணிகள் ஆக்கிரமித்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. அன்ரிசர்வ்டு டிக்கெட்டை வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டிக்குள் ஏறுவது.. வெயிட்டிங் லிஸ்ட் வைத்திருக்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிக்குள் ஏறுவது போன்றவற்றால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் புக் செய்த சீட் கிடைக்காமல் கடும் பாடு பட்டனர்.


ரயில்வே அறிவுறுத்தல்: கோடை விடுமுறை காலங்களில் வட மாநிலம், தென் மாநிலம் என பாகுபாடு இல்லாமல் நாடு முழுக்க இப்படி முன்பதிவு பெட்டிக்குள் சாதாரண டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏறி ஆக்கிரமித்ததை பார்க்க முடிந்தது. வந்தே பாரத் ரயிலுக்குள் கூட ஓபன் டிக்கெட் வைத்திருந்த பயணிகள் பலரும் ஏறினார்கள். இதனால், கடும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள், ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்களை முன்வைத்தனர்.


ரயில்வே போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. ரயில்வே நிர்வாகத்திற்கு இது பெரும் தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில் தான், முன்பதிவு பெட்டிகளுக்குள் கன்பார்ம் டிக்கெட் இல்லாத பயணிகள் ஏறுவதை தடுக்க விதிகளை கடுமையாக பின்பற்ற ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.


வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிக்குள் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. டிக்கெட் பரிசோதகர்களும் இதை கண்டு கொள்வது இல்லை. அதேவேளையில் ஆன்லைனில் டிக்கெட் எடுத்தால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தானாக பணம் திரும்ப கிடைத்து விடும் என்பதால் ஆன்லைன் டிக்கெட் எடுத்து இருந்தால் அவர்களை இறக்கி விட்டு விடுவார்கள்.


ரூ.440 அபராதம்: இந்த நிலையில்தான், ஜூலை மாதம் முதல் கவுண்டர் டிக்கெட் எடுத்து இருந்து வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் அவர்களை முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியிருக்கிறதாம். வெயிட்டிங்க் லிஸ்ட் டிக்கெட் உடன் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தால் ரூ.440 அபராதம் விதிப்பதோடு பெட்டியில் இருந்து இறக்கி விட வேண்டும் எனவும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.


அதிகாரிகள் விளக்கம்: ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் உடன் பயணிகள் ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால், ஏற்கனவே முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கினர். இது தொடர்பாக தொடர்ப் புகார்கள் போனதால் ரயில்வே இந்த விதியை கடுமையாக்க முடிவு செய்து இருக்கிறதாம்.


இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உடன் முன்பதிவு பெட்டியில் பயணிக்க தடை இருப்பது இது புதிது அல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே ரயில்களில் இந்த விதி உள்ளது. எனினும், கவுண்டரில் டிக்கெட் எடுத்து வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும் அந்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதர்கள் கெடுபிடி காட்டுவது இல்லை. தற்போது இந்த விதியை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent