அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர் இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கை மட்டும் இன்று வரை அப்படியே உள்ளது.
ஏற்கனவே புதிய பென்ஷன் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இறந்தவர்களின் 38000 குடும்பங்கள் வாழ வழியின்றி தெருவில் நிற்கிறது ஏற்கனவே போட்ட கமிட்டிகள் பல உயிர்களை காவு கொடுத்துள்ளது மீண்டும் கமிட்டி என்ற பெயரில் ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை கபளிகரம் செய்ய அடித்தளம் போட வேண்டாம்..
என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக