'பள்ளிகளில் அனைத்து மன்ற போட்டிகளையும் நடத்தி, மாணவர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வினாடி - வினா மன்றம் உள்ளிட்ட மன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த மன்றங்களின் வாயிலாக, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியாண்டு பாடவேளை அட்டவணைக்கு ஏற்ப, பள்ளி, வட்டாரம், மாவட்டம், மற்றும் மாநில அளவிலான போட்டிகளை ஏப்ரல் வரை நடத்த வேண்டும்.
இதை, சில பள்ளிகள் பின்பற்றாமல் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பபட்டு உள்ள சுற்றறிக்கை:
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான அனைத்து மன்றப் போட்டிகளையும் வாரந்தோறும் நடத்த வேண்டும். அதில், வெற்றி பெறும் மாணவர்களை, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டி யிடும் தகுதியை ஊக்குவிக்க வேண்டும்.
இதை, முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். போட்டிகளின் நிலை குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக