“சட்டசபை தேர்தல் நேரத்திலே கொடுத்த வாக்குறுதி எதையுமே இந்த அரசு நிறைவேத்தலே. அதனாலே, அடுத்த வருஷம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்துக்காரங்க தயாராகிட்டு இருக்கா களாம் வே...
இது சம்பந்தமா சங்க கூட்டம் நடக்கறப்ப எல்லாம் ஆவேசமா பேசுதாக. இதைப்பார்த்து சங்க நிர்வாகி கள் எல்லாம் மிரண்டு போயி இருக்காக ளாம்.
இதனாலே, முக்கியமான பொறுப் பிலே இருக்கறவங்க எல்லாம் ஆளை விட்டா போதுமுன்னு ஓட ரெடியாகி, விஆர்எஸ் கொடுக்கற முடிவுக்கு வந்துட் டாகளாம் வே... இது தெரிஞ்சு ஏன் இப் படி முடிவு எடுக்குதீகன்னு அவங்களுக்கு நெருக்கமானவங்க கேட்டதுக்கு.
இவங்ககிட்டே இருக்கற ஆவேசத்தை பார்க்க றப்ப போராட்டம் ரொம்ப பெரிய அளவிலே நடக்க வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்தா அரசு எந்த மாதிரி நடவடிக்கை எடுக்குமுன்னு சொல்ல முடியாது. ரிட்டயர்டு ஆனாலும் பணப்பலன்களை வாங்க எத்தனை வருஷம் காத்திருக்கணு முன்னும் தெரியாத நிலைமை வந்துடும். அதனாலேதான் இப்பவே ஒதுங்கிடலாமுன்னு முடிவுக்கு வந் துட்டோமுன்னு சொன்னாகளாம் வே...
இந்த தகவல் அரசல் புரசலா சங்க உறுப்பினர்களுக்கு தெரிஞ்ச தும் நம்ம பிரச்னைக்கு துணை நிற்க வேண்டியவங்க அரசை பகைச்சுக் காம பலனை அனுபவிச்சுகிட்டு இருந்திருக்காங்கன்றது இப்பத்தான் தெரியுது.
இந்த மாதிரி ஆளுங்க கிட்டே இத்தனை வருஷமா சங்க நிர்வாகம் இருந்ததாலேதான் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கூட கொடுக்காம ஆட்சி அதிகாரத் திலே இருக்கறவங்க ஏமாத்திகிட்டு இருந்திருக்காங்கன்னு உச்சகட்ட கோபத்திலே இருக்காகளாம் வே..." என்றார் அண்ணாச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக