இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 16.08.2024

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

 




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: காலம் அறிதல்.


குறள் எண்:484

ஞாலம் கருதினும் கைகூடும், காலம்

கருதி இடத்தால் செயின்.


பொருள்:(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் என கருதினாலும் கை கூடும்.


பழமொழி :

வாழு வாழவிடு. 


 Live and let live 


இரண்டொழுக்க பண்புகள் :  

*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும்  எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன். ‌‌


*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :

கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது. –ஜார்ஜ் வாஷிங்டன்


பொது அறிவு : 

1. கார்பன் மோனாக்சைடும் ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்?

விடை: நீர்வாயு 


2. ”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?

விடை: நக்கீரர் 


English words & meanings :

 difficulty-சிரமம்,

 trouble-சிக்கல்


வேளாண்மையும் வாழ்வும் : 

வானம் பார்த்து விவசாயம் செய்த காலங்கள் எல்லாம் பொய்த்துவிட்டது என்று சொன்னாலும், ஆடி மாதம் விதைத்தால் அற்புதமான விளைச்சலை அடையலாம் என்னும் நம்பிக்கை இன்றும் விவசாயிகளிடம் உண்டு.


ஆகஸ்ட் 16


அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் பிறந்த நாள்


அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 7ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வலச் சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.


நீதிக்கதை

காகங்களும் பாம்பும் 


 ஓர் ஆலமரத்தில் இரண்டு காகங்கள் வசித்து வந்தன. ஒரு பெரிய பாம்பு தங்க இடம் தேடி வந்து, அந்த மரத்தின் கீழ் உள்ள பொந்தில் நுழைந்தது. தங்கள் இருப்பிடத்தின் அருகில் ஒரு பாம்பு வந்து வசிப்பது அந்த காகங்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது.


பாம்பு காக்கை குஞ்சுகளைத் தின்றுவிடும் ஆகையால் கவனமாக இருங்கள், என்று மற்ற நண்பர்கள் காகங்களை எச்சரித்தனர். “இந்தப் பாம்பு குஞ்சுகளைத் தின்றுவிடும் என்றால் நான் எப்படி தான் இங்கே முட்டை இடுவது” என்று பெண்காகம் அழுதது, “நாம் பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாம்” என்றது. அதற்கு ஆண் காக்கை, “இல்லை, நாம் நம் வீட்டை விட்டு எங்கேயும் செல்ல வேண்டாம் அதற்கு பதில் இந்த பாம்பை விரட்டும் வழியை பார்க்கலாம்” என்றது.


 சில நாட்களுக்குப் பின் பெண் காக்கை முட்டை இட்டது, அதிலிருந்து மூன்று குஞ்சுகள் வெளியே வந்தது. காக்கை குஞ்சுகளின் கீச் கீச் என்ற சத்தம் கேட்டு, பாம்பு மரப் பொந்தில் இருந்து வெளியே வந்து மிகவும் மகிழ்ந்தது.


ஒரு நாள் காக்கைகள் இல்லாத நேரம் பார்த்து, பேராசை பிடித்த பாம்பு மரத்தின்மேல் ஏறி மூன்று குஞ்சுகளையும் தின்றது. காக்கைகள் திரும்பிவந்து பார்த்தபோது காலியாக இருந்த கூட்டை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.


 தாய் காக்கை வேதனையால் அழுதது. அப்போது ஆண் காக்கை, “நீ வருந்தாதே அவனுக்கு நான் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்கிறேன்” 


என்றது. ஆண் காக்கை ஒரு குள்ள நரியின் யோசனையைக் கேட்க சென்றது. ஆண் காக்கையின் கதையை கேட்ட நரி ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தது.


“நதிக்கரைக்கு சென்று, இந்த நாட்டின் ராணி குளிக்க வரும் போது அவருடைய வைர மாலையை எடுத்து வந்து பாம்பின் பொந்துக்குள் போட்டு விடு” என்று நரி சொன்னது. 


குள்ளநரி சொன்னபடியே ஆண் காக்கை நதிக்கரைக்கு சென்று வைர மாலையை எடுத்துக்கொண்டு பறந்தது. ராணியின் வைர மாலையை காக்கை எடுத்துக்கொண்டு பறப்பதை கண்ட சேவகர்கள் பின்னாடியே ஓடி சென்றனர்.


அந்த ஆண் காகம் வைர மாலையை பாம்பின் பொந்துக்குள் போட்டது. அதை பார்த்த சேவகர்கள்  ஒரு குச்சியை பொந்துக்குள் விட்டு அந்த மாலையை எடுக்க முயற்சி செய்தனர்.


குழப்பமடைந்த பாம்பு சீறி கொண்டே பொந்துக்குள் இருந்து வெளியே வந்தது. கையில் ஆயுதங்களுடன் இருந்த வீரர்களை பார்த்த பாம்பு பயத்தில், “இனி இந்த பக்கம் வரவே கூடாது” என்று அந்த இடத்தை விட்டு ஒடி சென்றது.


தங்கள் எதிரி விரட்டி அடிக்கப்பட்டதை கண்ட காக்கைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.


நீதி : கூர்மையான புத்தியும், தந்திரமான திட்டம் இடுதலும் ஆபத்து காலத்தில் உதவி செய்யும்.


இன்றைய செய்திகள் - 16.08.2024


* தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலையாணை அமல்.


* 'முதல்வர் மருந்தகம், காக்கும் கரங்கள் திட்டம்’ - சுதந்திர தின உரையில் ஸ்டாலின் அறிவிப்பு.


* நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 1,376 பணி இடங்களை நிரப்ப போட்டி தேர்வு: ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம்.


* பாதுகாப்பு படைகளின் பயன்பாட்டுக்காக அமெரிக்காவிடமிருந்து 31 ‘ஹன்டர் - கில்லர்’ டிரோன்களை வாங்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.


* குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிப்பு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு.


* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


* துலீப் கோப்பை டெஸ்ட் தொடர்: அணி மற்றும் வீரர்களின் பட்டியல்: பி.சி.சி.ஐ. அறிவிப்பு.


Today's Headlines

* Common Position for Tamil Nadu State Transport Corporations.


* 'Multanwar Dispensary, Protecting Hands Project' - Stalin's announcement in his Independence Day speech.


*  Competitive Examination to fill 1,376 posts including Nursing Superintendent, Health Inspector: Apply from August 17.


* India is in talks to buy 31 'hunter-killer' drones from the US for use by the security forces.


*  Monkey measles cases on the rise: World Health Organization warns countries


*  Cincinnati Open Tennis;  Italy's Jannik Sinner advances to the next round.


 * Duleep Cup Test Series: Team and Player List: BCCI  Notice.


 Prepared by

Covai women ICT_போதிமரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent