திருக்குறள்:
பால் :பொருட்பால்
அதிகாரம்: இடுக்கண் அழியாமை
குறள் எண்:629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் .
பொருள் :
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பி்ப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்த துன்பத்தை அடைவதும் இல்லை.
பழமொழி :
வலுவான உடலில் தெளிவான மனம்.
A sound mind in a sound body.
இரண்டொழுக்க பண்புகள் :
*எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.
*ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
பொன்மொழி :
எதிர்காலம் அவர்களின் கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு சொந்தமானது." - எலினோர் ரூஸ்வெல்ட்
பொது அறிவு :
1. இளைஞர் தினம் யாருடன் தொடர்புடையது?
விடை: விவேகானந்தர்
2. புத்த சமயத்தினர் கொண்டாடும் விழா?
விடை: புத்த பூர்ணிமா
English words & meanings :
greed-பேராசை,
vanity-வீண்பெருமை
வேளாண்மையும் வாழ்வும் :
4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
செப்டம்பர் 06
ஜான் டால்ட்டன் (John Dalton) FRS (/ˈdɔːltən/; 6 September 1766 – 27 July 1844) ஒரு ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளரும், வானிலை அறிஞரும் ஆவார். அவர் நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்படுபவர். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே.
நீதிக்கதை
இரண்டு கிளிகள்
முன்பு ஒரு காலத்தில் ஒரு மரத்தில் கிளி ஒன்று வசித்து வந்தது. அதற்கு ஒரே போல் இருக்கும் அழகான இரண்டு குஞ்சுகள் இருந்தது. ஒருநாள் தாய் கிளி தன் குஞ்சுகளுக்கு உணவு தேடி சென்ற போது, ஒரு வேடன் அங்கே வந்து அந்த மரத்தில் ஏறி அந்த இரண்டு குஞ்களையும் எடுத்து தன் பைக்குள் போட்டான்.
ஆனால் ஒரு குஞ்சு சாமர்த்தியமாக தப்பித்து விட்டது. அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர் வேடனிடம் இருந்து தப்பிய குஞ்சை பார்த்து அதை தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு அந்த இரண்டு கிளி குஞ்சுகளுள் ஒன்று வேடனுடமும், மற்றொன்று முனிவரிடமும் வளர்ந்தது.
ஒரு நாள் அந்த நாட்டினுடைய மன்னர் தன்னுடைய குதிரையில் காட்டுக்கு வந்தார். அங்கே வேடனின் வீடு இருந்தது. மன்னர் அவன் வீட்டின் அருகே குதிரையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று, “எஜமானே எவனோ ஒருவன் குதிரையில் வந்து கொண்டிருக்கிறான். சீக்கிரம் வில்லை எடுத்து எய்து அவனை கொல்லுங்கள்” என்று ஒரு கூண்டிற்குள் இருந்த கிளி சத்தம் போட்டது. அதைக் கண்ட மன்னர் திரும்பிக்கூடப் பார்க்காமல் தன்னுடைய குதிரையை ஓட்டி சென்றார். வழியில் ஒரு ஆசிரமம் இருப்பதை பார்த்தார்.
அந்த ஆசிரமத்தில் தண்ணீர் குடிக்க அவருடைய குதிரையை நிறுத்தினார். ஆசிரமத்திற்கு அருகில் சென்ற போது அங்கேயும் கூண்டுக்குள் ஒரு கிளி இருந்தது. அதை பார்த்ததும் “இங்கேயும் ஒரு முரட்டுத்தனமான கிளி உள்ளது” என்று அவர் எண்ணினார்.
ஆனால் அவர் ஆச்சரியப்படும் விதத்தில் அந்த கிளி பாட தொடங்கியது, “வருக வருக மன்னரே மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கின்றோம்” என்று பாடியது.
உருவத்தில் அந்த வேடனின் வீட்டில் இருந்த கிளி போல இருந்தாலும். குணத்தில் சாந்தமும், நட்புடனும் இருக்கிறது என்று மன்னர் நினைத்தார்.
“உன்னைப்போல ஒரு நல்ல குணமுடைய கிளியை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். “கொஞ்சம் முன்பு தான் உன்னை போல தோற்றமுள்ள ஒரு முரட்டுத்தனமான கிளியை பார்த்தேன்” என்றார் மன்னர்.
“அந்தக் கிளி வேடனிடம் உள்ளதா..?” என்று ஆசிரமத்தில் இருந்த கிளி கேட்டது. “ஆமாம்! ஆனால் அது உனக்கு எப்படி தெரியும்” என்று அரசர் கேட்டார்.
அந்தக் கிளி சொன்னது, “மன்னரே அவன் என்னுடைய சகோதரன் தான். நாங்கள் இருவரும் ஒரு கூட்டில் தான் வசித்து வந்தோம். ஒருநாள் அந்த வேடன் வந்து என்னையும், என் சகோதரனை பிடித்துச் சென்றான். நான் எப்படியோ தப்பித்து விட்டேன். அந்த வேடனுடைய கெட்ட குணம் தான் என்னுடைய சகோதரனுக்கு வந்துள்ளது. ஆனால் என்னுடைய எஜமானரோ ரொம்பவே நல்லவர் அவருடைய நற்குணம் தான் எனக்கு கிடைத்துள்ளது” என்றது அந்த கிளி. அதைக் கேட்டு மன்னர் மிகவும் ஆச்சரியமுற்றார்.
நீதி: வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப குணங்கள் மாறுபடும்.
இன்றைய செய்திகள் - 06.09.2024
* ஆந்திராவில் வெள்ளம் உள்துறை கூடுதல் செயலாளர் திரு. சிவகுமார் ஜிண்டால் தலைமையிலான மத்தியக் குழு ஆய்வு.
* சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் இன்றி நாளை பூமிக்கு திரும்புகிறது ஸ்டார்லைனர். இது மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்கும்.
* முதல் திருவள்ளுவர் சர்வதேச கலாச்சார மையம்.. செமி கண்டக்டர் துறைகளில் முக்கிய ஒப்பந்தம்.. சிங்கப்பூர் அரசுடன் பிரதமர் மோடி கையெழுத்து.
* பாரா ஒலிம்பிக்: ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.
* பாரா ஒலிம்பிக் : பெண்கள் 100 மீட்டர் டி-12 அரையிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Today's Headlines
* Floods in Andhra, under the leadership of Home Additional Secretary Mr. Sivakumar Jindal, A central committee study the situation there.
* There is trouble bringing Sunita Williams and Butch Wilmore back to Earth. So the Starliner returns to Earth tomorrow without them. It will land at the White Sands Spaceport in Mexico.
* First Thiruvalluvar International Cultural Centre.. Major Agreement in Semi Conductor Sectors.. Prime Minister Modi signs with Singapore Government.
* Para Olympics: India bagged its 25th medal in judo after Kapil Parmar won bronze.
* Para Olympics: India's Simran finished 2nd in women's 100m T-12 semi-final race. Through this, he advanced to the finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக