இந்த வலைப்பதிவில் தேடு

புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை

செவ்வாய், 29 அக்டோபர், 2024

 



சென்னையில் இன்று(அக்.,29) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வழக்கத்தை விட தங்கம் விற்பனை அதிகமாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அக்.,24ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,285 ரூபாய்க்கும்; சவரன், 58,280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 110 ரூபாய்க்கு விற்பனையானது.


அக்.,25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 7,295 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 58,360 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,26ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.


நேற்று (அக்.28) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று(அக்.,29) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent