இந்த வலைப்பதிவில் தேடு

தீபாவளியன்று எவ்வளவு நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்? - தமிழக அரசு உத்தரவு

செவ்வாய், 29 அக்டோபர், 2024

 




தீபாவளிப் பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க முடியும்.


பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்கவேண்டுமென மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.


அத்துடன், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அந்த வாரியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.


கடந்த ஆண்டைப் போலவே மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.


சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அனைவரும் பின்பற்றுமாறு சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent