இந்த வலைப்பதிவில் தேடு

தங்கம் விலை சற்று குறைந்தது!

செவ்வாய், 5 நவம்பர், 2024

 




சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 5) சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.


வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ. 7,370-க்கும், ஒரு சவரன் ரூ. 58,960-க்கும் விற்பனையானது.


இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,840 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 7,355 விற்பனையாகிறது.


வெள்ளி விலையும் குறைவு


வெள்ளியின் விலை கடந்த 5 நாள்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனை நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 105-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,05,000-க்கும் விற்பனையாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent