இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 09.11.2024

சனி, 9 நவம்பர், 2024

 



திருக்குறள்: 

"பால் :பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 


குறள் எண்:809

 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

 விடாஅர் விழையும் உலகு.


பொருள்:உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்."


பழமொழி :

அடக்கம் ஆயிரம் பொன் தரும். 

Humility will give one thousand bucks.


இரண்டொழுக்க பண்புகள் :  

 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு : 

1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? 

விடை : ஜேம்ஸ் வாட்.


2. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது 

விடை : 70


English words & meanings :

  • Cumin-சீரகம்
  • Curry Leaf-கறிவேப்பிலை 


வேளாண்மையும் வாழ்வும் : 


நாம் எப்படி நில மேலாண்மை செய்தால்  விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். அதில் பயிர் வளர்ச்சிக்கு முதன்மையான தழைச் சத்து சரியான நேரத்தில் சரியான அளவு கிடைக்கும் படி பார்க்க வேண்டும். 


நவம்பர் 09


கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்




அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.


கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்



கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.


நீதிக்கதை


சூரியனும்... குகையும்...

சூரியனும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தன. குகையால் ஒளி என்றால் என்ன? என்பதையும் என்றால் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள தெரியவில்லை. அதேபோல் சூரியனுக்கு இருட்டு என்றால் என்ன? என்றே தெரியவில்லை. 


எனவே இருவரும் தத்தமது இடத்தை மாற்றிக்கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பினர். குகை வானத்தில் ஏறி சூரியனின் இடத்திற்கு சென்றது. சூரியன், பூமிக்கு இறங்கி வந்து குகையின் இருப்பிடத்துக்குச் சென்றது. 


சூரியனின் இடத்தை தற்போது அடைத்திருந்த குகை, அருமை! வெளிச்சம் என்றால் என்ன என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவும் தெளிவாகத் தெரிகின்றன. நன் இதற்கு முன் எவ்வளவு கீழ்மையாக வாழ்த்தேன் என்பது இப்போதுதான் புரிகிறது?" என்றது குகை     குகையின் இருப்பிடத்தை அடைத்திருந்த சூரியனோ, எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றது.  


அறிவுள்ளவர்களைப் பொறுத்தவரை. அவர்கள் அறியாமை நிறைந்தவர்களின் பெரும் கூட்டத்தில் இருந்தாலும் அந்த அறியாமை அவரை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. தன்னுடைய ஞானத்தின் ஒளியில் அவர் எப்போதும் தெளிவாகவே இருப்பார். 


இன்றைய செய்திகள் - 09.11.2024


* பாம்புக் கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


* தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது.


* டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, விவசாய கழிவுகளை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.


* வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.


* தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: தமிழக அணி காலிறுதிக்கு முன்னேற்றம்.


* புரோ கபடி லீக்: இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி.


Today's Headlines


* The Tamil Nadu government has issued an ordinance declaring snakebite as a "notifiable disease".


*  The Forest Department has started a safe trekking program at 40 places in 14 districts of Tamil Nadu.


 * Due to increase in air pollution in Delhi, central government has doubled the fine imposed on burning of agricultural waste.


 * Donald Trump has appointed Susie Wiles as the first female White House chief of staff.  It has received worldwide attention.


 * National Senior Hockey Tournament: Tamil Nadu team advances to quarterfinals.


* Pro Kabaddi League: Dabang Delhi beat Bengal Warriors in today's match.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent