இந்த வலைப்பதிவில் தேடு

மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் - ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் அறிவிப்பு

சனி, 14 டிசம்பர், 2024

 




உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 


‘‘செவித் திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல், மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் ஆகிய பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது. 


8ம் வகுப்பு தேர்ச்சிபெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் / அதற்கு இணையாக இரண்டு வருட அனுபவம் உள்ள மாற்றுத்தினாளிகள் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயில தகுதியுடையவர்கள்.


மேற்கண்ட இரு பாடப்பிரிவுகளிலும் தலா 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent