தமிழக அளவில் பணிபுரியும் கிரேடு 2 போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணி நிமித்தமாக சென்று வர அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க, 'ஸ்மார்ட் அடையாள அட்டை' வழங்கப்பட உள்ளது.
அனைத்து சிறப்பு பிரிவு, ஆயுதப்படை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், தலைமை காவலர்கள், கிரேடு 1, கிரேடு 2 போலீஸ் என, மாநில அளவில் 1.25 லட்சம் பேருக்கு, இந்த அட் டை வழங்கப்பட உள்ளது.
இந்த அட்டை, மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு, 200 ரூபாய் என்ற கணக்கில், 29.96 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக