அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அறையில், மலம் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 27ம் தேதியன்று பள்ளியின் ஆசிரியர் ஓய்வு அறையில் புத்தகங்கள் சூறையாடப்பட்டு, மேசையின் அறை மற்றும் தரைப்பகுதிகளில் மனித மலம் கழிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,பள்ளியின் வளர்ச்சி பிடிக்காத சமூகவிரோதிகள் சிலர் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இதுபோன்ற அவலம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றனர்.
பள்ளிக்குள் சமூக இழிவான சம்பவம் நடைபெற்றிருப்பது, அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக