அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் மே 31ம் தேதிக்குள் ஓய்வு பெற்ற, ஓய்வு பெறவுள்ளவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக அனுப்ப வேண்டும். அதில் எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
இதேபோல், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிக்காலங்களில் மேற்கொண்ட வரவு செலவு கணக்குகள் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விவரங்களை coseauditsec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இது சார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக