விரும்பும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணிபுரிய, வாய்ப்பு வழங்குமாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், கோவை வருவாய் மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த காலங்களில் முகாமில் தங்கி, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
தற்போது, வீட்டில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், கோவை கல்வி மாவட்டத்திலும், கோவை கல்வி மாவட்ட ஆசிரியர்கள் சிலர், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலும் வசித்து வருகின்றனர்.
இதனால், கடந்தாண்டு வரை அவர்கள் வருவாய் மாவட்டத்திற்குள், விரும்பும் திருத்தும் மையத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும், ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக