பள்ளி மாணவரை கொடூரமாக தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கரும்பூர் இந்து மேல்நிலை பள்ளியில் கடந்த 20ம் தேதி 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த வகுப்பு தேர்வில் மாணவர் விஜயகுமார் என்பவர் சரியாக தேர்வை எழுதாமல் மற்ற மாணவர்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ், மாணவரை கண்டித்துள்ளார்.
மேலும், தேர்வு எழுதும் அட்டையால் மாணவரின் தலையில் அடித்ததில் அந்த மாணவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டியதால் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்து பள்ளி மேலாண்மை குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் முருகதாஸை பள்ளி மேலாண்மை குழு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக