இந்த வலைப்பதிவில் தேடு

"எண்ணும் எழுத்தும்" பயிற்சி வாயிலாக ஆசிரியர்களின் திறன் மதிப்பிடப்படும்

திங்கள், 16 ஜூன், 2025

 



ஆரம்பப்பள்ளிஆசிரியர்களுக்கு, மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் நோக்குடன், சிறப்பு பயிற்சி கணபதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடத்தப்பட்டது.


மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும்,'எண்ணும் எழுத்தும்' பயிற்சியின் ஒரு பகுதியாக, பேரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 280 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.


'அரும்பு', 'மொட்டு', 'மலர்' என மூன்று நிலைகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அந்த நிலைக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதற்காக, ஆசிரியர் கையேடு, மாணவர் கையேடு மற்றும் பாடநூல்களில், உள்ளடக்கங்கள் அடிப்படையாக கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.


ஆசிரியர் பயிற்றுனர்கள் வழிகாட்டியாக இருந்து, நாள் ஒன்றில் ஐந்து கட்டங்களாக வகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு கட்டத்திலும், 50 பேர் வீதம் பயிற்சியில் கலந்துகொண்டனர். இதேபோல், குனியமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி நடந்து வருகிறது.


வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும், இந்த பயிற்சி வாயிலாக, ஆசிரியர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent