நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) இடைநிலை ஆசிரியர்களுக்கான நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, 3ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் நேற்று முன் தினம், ஒன்றியத்துக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்துார், காரமடை, சூலுார் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆறு பணியிடங்கள், அன்னுார் மற்றும் சூலுார் வட்டாரங்களில் உருது மொழி ஆசிரியர்களுக்கான இரண்டு பணியிடங்கள் என, எட்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இப்பணியிடங்களுக்கு, 174 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 65 பேர் விருப்பமில்லை எனத் தெரிவித்து விலகினர். அதேசமயம், 99 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
326 பேர் 'ஆப்சென்ட்'
கரூரில், இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்களில், 326 பேர் கலந்து கொள்ளவில்லை.
கரூர் தான்தோன்றிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலந்தாய்வு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் தலைமையில் கலந்தாய்வு நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியத்திற்குள் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. அதில், 310 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 134 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதில், 19 ஆசிரியர்களே மறுதல் ஆணைகளை பெற்றனர். விண்ணப்பித்தவர்களில், 176 பேர் பங்கேற்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக