இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 236 NEET, JEE பயிற்சி மையங்கள் - பள்ளிக் கல்வித் துறை தகவல்

சனி, 2 ஆகஸ்ட், 2025

 




அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.


இதுகுறித்​து, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உயர்​ கல்விக்​கான நீட், ஜேஇஇ உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​கள் எழுத விருப்​ப​முள்ள மாணவர்​களுக்​காக வட்​டார அளவி​லான உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.


இதுத​விர, போட்​டித் தேர்​வு​களுக்கு தயார்​படுத்​து​வதற்​காக இந்த ஆண்டு 38 மாவட்​டங்​களில் இருந்து உயர் தொழில்​நுட்ப ஆய்வக வசதி​யுள்ள 236 வட்​டாரங்​களில் உயர்​கல்வி வழி​காட்டி மையங்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு மாணவர்​களின் உயர்​கல்வி விருப்​பத்​துக்கு ஏற்ப சனிக்​கிழமை​களில் உரிய பயிற்​சிகள் வழங்​கப்​படும். அதில் உயர்​கல்வி சேர்க்​கைக்​கான ஆலோ​சனை​கள், வழி​காட்​டு​தல்​களைப் பெறலாம். இந்த மையங்​களில் பயிற்சி தர முது​நிலைப் பாட ஆசிரியர்​கள் சுழற்சி முறை​யில் நியமிக்​கப்​பட்​டுள்​ளதை உறு​தி​செய்ய வேண்​டும்.


அதே​போல், பயிற்​சிகள் தடை​யின்றி நடை​பெறும் வகை​யில், சார்ந்த வட்​டாரத்​தின் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்​வொரு வார​மும் பணி புரிவதை உறுதி செய்ய வேண்​டும். பயிற்சி அளிக்​கும் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​களுக்கு மதிப்​பூ​தி​யம் ரூ.1,000 வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent