இந்த வலைப்பதிவில் தேடு

மாணவன் கன்னத்தில் அறை தலைமை ஆசிரியர் மீது வழக்கு

புதன், 20 ஆகஸ்ட், 2025

 




அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 10ம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அடித்ததில் அவனது செவிப்பறை கிழிந்தது. இதையடுத்து, ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள குண்டம்குழி என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த 11ம் தேதி இறைவணக்கம் பாடுவதற்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் கால்களால் கீழே கிடந்த கூழாங்கற்களை மிதித்து விளையாடி கொண்டிருந்தான்.


அதை கவனித்த தலைமை ஆசிரியர், மாணவனை அருகே அழைத்து கன்னத்தில் அறை விட்டார். வலியால் அலறி துடித்த அவன் வீட்டுக்கு சென்று காது வலிப்பதாக தெரிவித்துள்ளான்.


இதையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் அவன் செவிப்பறை கிழிந்தது தெரியவந்தது.


மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கேரளாவில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் உறுப்பினர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், மாநில பொதுக்கல்வி துறை அமைச்சர் சிவன் குட்டி, மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent