இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம் - வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

 




பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நில​வரப்​படி பள்​ளி​களில் உள்ள மாணவர் எண்​ணிக்​கைக்​கேற்ப முது​நிலை ஆசிரியர் பணி இடங்​கள் நிர்​ண​யம் செய்​யப்பட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.


அதன்​படி தமிழ் மற்​றும் ஆங்​கில பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 24 பாட​வேளை​களும், இதர பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 28 பாட​வேளை​களும் குறைந்​த​பட்​சம் வரு​மாறு பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது. 11, 12-ம் வகுப்​புக்கு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்​தைப் பின்​பற்ற வேண்​டும். மேல்​நிலைப் பள்ளி அமைந்​துள்ள பகுதி மாநக​ராட்​சி, நகராட்​சி​யாக இருப்​பின் 30 மாணவர்​களும், ஊரகப் பகு​தி​யாக இருந்​தால் மாணவர் எண்​ணிக்கை 15 ஆகவும் குறைந்​த​பட்​சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


ஒரு​முறை பணிநிர​வல் செய்த ஆசிரியர்​களை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்​யக்​கூ​டாது. அதே​நேரம், பணிநிர​வல் நடவடிக்​கைக்கு உள்​ளான ஆசிரியர் இந்த ஆண்​டும் விருப்​பம் தெரி​வித்​தால் அவரை தற்​போதைய பணி​யாளர் நிர்​ண​யித்​தின்​போது உபரி​யாகக் காண்​பிக்​கலாம்.


இந்த வழி​முறை​களைப் பின்​பற்றி முது​நிலை ஆசிரியர்​களை பணி நிர்​ண​யம் செய்​து, அதன் விவரங்​களை இயக்​குநரகத்​துக்கு அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுஉள்​ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent