தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி செப்.,11ல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தேனியில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (சி.பி.எஸ்.,) ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேற்கு வங்கத்தில் புதிய ஓய்வூதியத்திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
புதிய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்திய ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. அதே போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்.
தி.மு.க., அளித்த வாக்குறுதிகள், வார்த்தை ஜாலத்தை நம்பியது போல இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற மாட்டார்கள்.
குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,11ல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதனையடுத்து அக்.,10ல் மாவட்ட அளவில் மறியல், நவ.,11ல் சென்னையில் ஊர்வலம், 2026 ஜன.,21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் உள்ளோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக