TET (Teacher Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், 16 ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.
தகுதித் தேர்வுக்கு தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், ஏற்கனவே பணியில் உள்ள, டெட் தேர்வை எழுதாதவர்களும் அதை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தநிலையில், நடப்பு ஆண்டின் டெட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியானது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், 16 ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.
விண்ணப்ப திருத்த கால அவகாசம் செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு முடிவடைந்தது.
அந்த வகையில், நடப்பாண்டு டெட் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 9-ம் தேதி மாலை நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடைசி நாளான 10-ம் தேதி மட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள் உயர்ந்து, 4 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக