இந்த வலைப்பதிவில் தேடு

உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு

செவ்வாய், 28 அக்டோபர், 2025

 



பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு மூல​மாக, உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 நியமனம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.


அதன்​படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நில​வரப்​படி, உடற்​கல்வி ஆசிரியர் பணி​யில் இருந்து உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகு​தி​யானவர்​களின் பெயர்ப் பட்​டியலை தயார்​ செய்து அனுப்ப வேண்​டும்.


அந்த வகை​யில், இந்த பட்​டியலில் இளநிலை​யில் இரட்டை பட்​டப் படிப்பு படித்​தவர்​களின் பெயரை சேர்க்​கக் கூடாது. பட்​டியலில் இடம் பெற்​றுள்ள ஆசிரியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் இருக்​கிறதா என்​பதை கூர்ந்​தாய்வு செய்ய வேண்​டும்.


விதி​முறை​களுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்​துரைத்​தாலோ அல்​லது பெயர் விடு​பட்​ட​தாக தெரி​வித்து முறை​யீடு ஏதும் பின்​னர் பெறப்​பட்​டாலோ அதற்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே, இந்த விவ​காரத்​தில் கூடு​தல்​ கவனத்​துடன்​ செயல்​பட வேண்​டும்​. இவ்​​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent