முதல்வர் திறனறித் தேர்வு கையேடு: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்
1. தமிழக அரசு சார்பில் பிளஸ் 1 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நோக்கில் முதல்வர் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
2. இந்தத் தேர்வுக்கான வழிகாட்டி கையேடுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
3. இந்தத் தேர்வு 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
4. தேர்வு நோக்கம்: அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது.
5. இந்தத் தேர்வில் மாநில பாடத்திட்டம் (வகுப்பு 9 மற்றும் 10) அடிப்படையிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் இடம்பெறும்.
6. தேர்வு இரு தாள்களாக நடைபெறும்.
7. மொத்தமாக 1,000 மாணவர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவிகள்) தேர்ந்தெடுக்கப்படுவர்.
8. தேர்வு வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வீதம், 10 மாதங்களுக்கு ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும்.
9. உதவித்தொகை இளநிலைப் பட்டப்படிப்பு வரை தொடரும்.
10. அரிமா சங்கம் (வேளச்சேரி, சென்னை) இந்தத் தேர்வுக்கான வழிகாட்டி கையேடுகளை தயாரித்துள்ளது.
11. கையேடுகள் உருவாக்கத்தில் 54 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
12. வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு கையேடுகளை வெளியிட்டார்.
13. 2,500 பிரதிகள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
14. மேலும் கூடுதல் பிரதிகளையும் அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
15. இந்த வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற உதவும் என்று சங்கத்தின் கல்விசேவை பிரிவு தலைவர் பி.செல்வகுமார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக