ஆசிரியர்களின் நலன் கருதி 15ம் தேதி விடுமுறை அளிக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் வரும் சனிக்கிழமை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15ம் தேதி வேலை நாளாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்பொழுது தமிழ்நாடு தேர்வு ஆணையம் அன்று ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத உள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கல்வித்துறை வரும் சனிக்கிழமை 15ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக