இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 03.12.2025 இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

செவ்வாய், 2 டிசம்பர், 2025

 



நாளை டிசம்பர் மூன்றாம் தேதி இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது


அதன்படி கார்த்திகை தீபம் விழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை டிசம்பர் மூன்றாம் தேதி விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ்  அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்


மேலும் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக 2025 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயக்கும். 


அதேபோல் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent