இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 15.12.2025

திங்கள், 15 டிசம்பர், 2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2025



திருக்குறள்: 

குறள் 1041: 

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் 

இன்மையே இன்னா தது. 


விளக்க உரை: 

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.


பழமொழி :

Life is a journey, not a race. 


வாழ்க்கை ஓர் பயணம், ஓட்டப்பந்தயம் அல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.


2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.


பொன்மொழி :

முடிந்தவரை மகிழ்ச்சியுடன் இருங்கள்; கவலைப்படும் மனிதனைக் கண்டு யாரும் சந்தோஷப்பட மாட்டார்கள் - தாமஸ் புல்லர்


பொது அறிவு : 

01.மின்னஞ்சலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்  யார்?

  • ரேமண்ட் சாமுவேல் டாம்லின்சன்
  • Raymond Samuel Tomlinson


02.இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் எது?

  • குஜராத்(Gujarat)


English words :

  • simultaneous - occurring at the same time
  • Ambigous - not clear


தமிழ் இலக்கணம்: 

 முற்றுப்புள்ளி ( . ): வாக்கியத்தின் முடிவைக் குறிக்கிறது, ஒரு முழுமையான கருத்தை முடித்ததைக் காட்டுகிறது 

எ: கா 1.  அவன் வந்தான்.

2. ஆசிரியர் பாடம் முடித்து விட்டார்.

3. அணில் பழம் சாப்பிட்டது.


அறிவியல் களஞ்சியம் :

 நெருப்பு கோழி


*உலகின் மிகப் பெரிய பறவை. பறக்க முடியாத பறவை.

* பறக்க முடியா விட்டாலும் மணிக்கு 70 கி. மீ வேகத்தில் ஓடக்கூடிய பறவை ஆகும்.

* இவற்றின் இறக்கையின் நீளம் 2 மீட்டர் ஆகும்.

* கால்கள் மிக வலியது. இவற்றின் ஒரு உதை மனிதன் மற்றும் சிங்கத்தை கூட கொல்ல வல்லது

* உலகின் மிகப் பெரிய முட்டை இதன் முட்டை தான். 15 செ. மீ நீளம் உள்ளது.


டிசம்பர் 15

வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்



வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/; டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.


நீதிக்கதை


 ஆமையும் நரியும்

ஒரு ஆமை ஓடைக் கரையில் இருந்த ஒரு பொந்தில் வசித்து வந்தது. அதற்குப் பக்கத்தில் உள்ள புற்றில் ஒரு நாகம் குடியிருந்தது. ஆமையும் நாகமும் நண்பர்கள். இரண்டும் சேர்ந்தே இரை தேடப் போவதும் சேர்ந்தே இருப்பிடத்திற்குத் திரும்புவதுமாக இருந்தன. 


ஒரு நாள் காலை ஆமையும் நாகமும் ஓடைக்கரை புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. அப்போது சற்று தூரத்தில் மனிதக் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தது ஆமை. ஒரு மனிதன் கையில் கம்புடன் வந்து கொண்டிருக்கிறதைப் பார்த்த ஆமை நாகத்தைப் பார்த்து ஆபத்து வேகமாக ஓடி மறைந்து கொள் என்றது. ஏன் என்று கேட்டது நாகம். அதோ ஒருவன் கையில் கம்புடன் வந்து கொண்டிருக்கிறான். அவன் நம்மைப் பார்த்தால் அடித்துக் கொன்றுவிடுவான் என்றது ஆமை. 


பாம்பு சொன்னது ஆமையைப் பார்த்து அவனுக்கு நீ வேண்டுமானால் பயப்படலாம். நான் பயப்படமாட்டேன். என் பல்லில் கொடிய நச்சு இருக்கிறது. நான் கடித்தால் அவனுக்கு இறப்பு உறுதி. அதனால் அவன்தான் என்னைப் பார்த்ததும் பயந்து ஓடவேண்டும் என்றது நாகம். 


காலடி ஓசை, அருகில் கேட்டது. ஆமை தனது கால்களையும் கழுத்தையும் உள்ளே இழுத்துக் கொண்டு அசையாமல் கிடந்தது. அசைவு இல்லாததால் வந்தவனின் பார்வை அதன் மீது பதியவில்லை. அவனது மேலோட்டப் பார்வையில் ஓடோ அல்லது பெரிய இலைச் சருகோ கிடப்பது போல் தோன்றியது. அதனால் அவன் ஆமை கிடந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தான். 


மெல்ல கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தது ஆமை. அங்கே அருகில் வந்துவிட்ட அந்த மனிதனைப் பார்த்த நாகம், உச்... ச்... ச்... சென்று சீறிக்கொண்டே தலையை உயர்த்தி எழும்பி படத்தை விரித்தது. அதைப் பார்த்த அவன் சட்டென்று தனது கையில் இருந்த கம்பினால் நாகத்தை அடித்தான். அந்த அடி, நாகத்தின் உடம்பில் பலமாக விழுந்தது. அய்யோ! என்று அலறிக் கொண்டே கோரைகளுக்கிடையில் புகுந்து ஊர்ந்து போனது நாகம். அவனும் நாகம் போன வழியில் தொடர்ந்து கோரைகளை விலக்கிப் பார்த்துக் கொண்டே விரைந்தான். அடிபட்ட நாகம், தப்பித்தால் போதும் என்று ஓடி புதருக்குள் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்துவிட்டது. பாம்பைத் தேடிப் பார்த்து அலுத்துப் போன அவன், தப்பித்து எங்கோ மறைந்துவிட்டது என்று போய்விட்டான். 


நாகத்தைத் தேடிவந்தது ஆமை. புதரைவிட்டு வெளியில் வந்த நாகம், நண்பா, அந்த மனிதன் என் முதுகில் பலமாக அடித்து விட்டான். இன்னொரு அடி விழுந்திருந்தால் நான் செத்திருப்பேன் என்றது. நல்லவேளை! தப்பித்துவிட்டாய். அது போதும். காயத்தை ஆற்றிவிடலாம் வா என்று அதற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றது ஆமை. அன்று, வழக்கம் போல் ஆமையும் நாகமும் புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. பின்னால் காலடி ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தது ஆமை. முன்பு பார்த்த அதே மனிதன் வந்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனது கையில் கம்பு இல்லை. 


நாகத்தைப் பார்த்து, நண்பா! முன்பு உன்னை அடித்த அதே மனிதன் வந்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் பாம்பு பிடிக்கும் வித்தைக்காரனாகத் தெரியவில்லை. அதனால், இப்போது உன் வீரத்தைக் காட்டலாம் என்றது ஆமை. சீறிக் கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்தது நாகம். நடுங்கிப் போன அவன், அதனிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடத் தொடங்கினான். அவன் ஓடுவதைப் பார்த்து, வயிறு குலுங்கச் சிரித்தன ஆமையும் நாகமும். அப்போது என்னை அடித்துக் கொல்ல வந்தவன், இப்போது என்னைக் கண்டு நடுங்கி ஓடுகிறான் என்றது நாகம். அப்போது அவனது கையில் கம்பு இருந்தது. எட்ட இருந்தே உன்னை அடித்துவிடலாம். அது, அவனுக்குச் சாதகமான நிலைமை. இப்போது அவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. உன்னை நெருங்கினால் கடித்துவிடுவாய். அதனால் அவன் தப்பித்து ஓடவேண்டி இருக்கிறது. இது உனக்குச் சாதகமான நிலைமை என்றது ஆமை. 


நீ எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாயே என்றது நாகம். ஆம். ஒருவருக்குச் சூழ்நிலை சாதகமாக இல்லாதபோது என்னைப் போல் சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்கவேண்டும். சாதகமாக இருந்திடும்போது உன்னைப் போல் சீறிப் பாயவேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும் என்றது ஆமை. நீ அறிவாளிதான் என்றது நாகம். புரிந்து கொண்டால் சரிதான் என்றது ஆமை. இரண்டும் மகிழ்ச்சியுடன் சிரித்தன. 


நீதி :

ஒருவனின் பலம் பலவீனம் இரண்டையும் பார்த்துதான் சண்டைக்குச் செல்ல வேண்டும்.


இன்றைய செய்திகள் - 15.12.2025

⭐ அனைத்து உயர் கல்விச் செயல்பாடுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் 'விக்சித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்' (Viksit Bharat Shiksha Adhikshan) புதிய ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.


⭐மக்கள்தொகை கணக்கெடுப்பு  2027-ல் டிஜிட்டல் முறையில் இரு கட்டங்களாக  கணக்கெடுப்பு நடத்த ரூ. 11,718 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது


⭐மும்பையை மிரட்டும் மனிதக் கடத்தல். குழந்தைகள் மாயம் 

* ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.


விளையாட்டுச் செய்திகள்

🏀U19 ஆசிய கோப்பை:

பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


Today's Headlines

⭐ The Union Cabinet has approved the formation of a new authority, Viksit Bharat Shiksha Adhikshan, to bring all higher education activities under one umbrella.


⭐The central government has approved an allocation of Rs 11,718 crore for conducting the census in two phases digitally in 2027.


⭐Human trafficking threatens Mumbai. Children disappear, and 145 children, including 93 girls, have gone missing in Mumbai in the 6 months from June to December.


 SPORTS NEWS 

🏀U19 Asia Cup: India set Pakistan a target of 241 runs. The start of the match was delayed due to rain.


Prepared By 

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent