இந்த வலைப்பதிவில் தேடு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி துறை திட்டம்

வியாழன், 2 மே, 2019

*அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போல், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது*

*மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், 2010ல், அறிவிப்பு வெளியானது. அதாவது, 2010க்கு பின், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்பவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என, மத்திய அரசு உத்தரவிட்டது*

*இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு நீட்டித்து வந்தது*


*இந்த அவகாசம், ஒன்பது ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டு, மார்ச், 31ல் முடிவுக்கு வந்தது.அதைத் தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய, சம்பள மானியத்தை நிறுத்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது*

*இதையடுத்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மார்ச்சுடன் பணி முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை, 'டிஸ்மிஸ்' செய்வது குறித்து, உரிய முடிவு எடுக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றமும், ஒப்புதல் அளித்துள்ளது*

*இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது*

*மத்திய அரசின், கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்*

*எனவே, தகுதி பெறாத, மெட்ரிக் ஆசிரியர்களை, பணியில் நீட்டிக்க விடுவதா அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்குவதா என, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent