இந்த வலைப்பதிவில் தேடு

நீதித்துறையில் அரசு வேலை.. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வியாழன், 2 மே, 2019

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி: இரவு காவலர் - 12
பணி: முழு நேர பணியாளர்(மசால்ஜி) - 03

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் - 632 009

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.05.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent