*இதனால் பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. எனவே அடுத்த ஆண்டு முன்கூட்டியே கலந்தாய்வுகளை முடிக்கும்படி ஆசிரியர்கள் கோரினர்*
*இ்ந்தாண்டும் ஊராட்சி, நகராட்சி தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான, பணி இடமாறுதல் கலந்தாய்வு, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, வட்டார கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் இருந்து வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு , நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல், பட்டதாரி ஆசிரியர் ஒன்றியத்துக்குள் பொது இடமாறுதல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பொதுமாறுதல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பொதுமாறுதல், தொடக்கப்பள்ளி தலைமையாயசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்*
*மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் பொதுமாறுதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பொதுமாறுதல், பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் போன்ற கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும்*
*பள்ளிகளில் கடைசி வேலைநாள் அன்று இடமாறுதல் விரும்புகின்ற ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படும். அதனை ெகாண்டு முன்னுரிமை பட்டியல், காலியிடங்கள் பட்டியல் போன்றவை அதிகாரிகளால் தயார் செய்யப்படும்*
*ஆனால் இந்த முறை தேர்தலை் காரணம் காட்டி விருப்ப விண்ணப்பங்கள் பெறப்படாமல் இருப்பதால் இனி ஜூன் மாதமே இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட வாய்ப்பு உள்ளது. அதன் பிறகே முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெறும். அவ்வாறு நடைபெற்றால் கலந்தாய்வு தொடங்க ஜூலை மாதம் ஆகிவிடும் என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்*
*இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ தமிழகத்தில் 4 லட்்சம் ஆசிரியர்களுக்கு மேல் உள்ள நிலையில் இதில் 2 லட்சம் பேர் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பர். அதனை போன்று பதவி உயர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பர்*
*இந்த முறை தேர்தலை காரணம் காட்டி கலந்தாய்வு பணிகள் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விருப்ப விண்ணப்பங்கள் கூட பெறப்படவில்லை. இதனால் பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் ஆகிறது. இது கற்பித்தல் பணிகளையும் பாதிக்கும்*
*மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் நிலை வரை உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வும் தாமதத்தால் பாதிக்கப்படுகிறது*
*மேலும் தொடக்க கல்வித்துறையில் இடமாறுதல் நடைபெறும்போது ஆசிரியர்கள் குறைவாக உள்ள 8 மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது*
*கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நடத்தப்படுவது இல்லை. இதனால் கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் 44 ஆசிரியர்கள் காலியிடங்கள் இருந்தபோதும் அது நிரப்பப்படவில்லை
*இந்த முறை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதுடன் முன்கூட்டியே இதற்கான விண்ணப்பங்களை பெறும் பணிகளையும் தொடங்க வேண்டும்’ என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக