இந்த வலைப்பதிவில் தேடு

கோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துகின்றனர் - ஆசிரியர்கள் அதிருப்தி

வெள்ளி, 10 மே, 2019

கோடை விடுமுறையில், அலுவலக பணியால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், ஏப்., 12 முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின், தேர்தல் பணி, விடைத்தாள் மதிப்பீடு, தேர்வு முடிவு வெளியீடு என, ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பணி ஒதுக்கப்பட்டது.பணிகள் நிறைவடைந்த நிலையில், மே விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிட்டியிருந்தனர். 

ஆனால், பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது:


தேர்வு முடிவு வெளிவரும் போது, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை, வழக்கம் போல் கையால் எழுதி தயாராக வைத்திருந்தோம். திடீரென, ஆன்லைனில் தயார் செய்ய உத்தரவிட்டனர்.

'பயோ மெட்ரிக்' இயந்திரத்தை நடைமுறைக்கு கொண்டு வருதல், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்கு, வர கட்டாயப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கல்வித்துறை அலுவலர் கூறுகையில், 'அலுவலக பணி, தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு, கணினி பரிச்சயம் இல்லாத நிலையில், ஆசிரியர்களை அழைத்திருக்கலாம். அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வரவேண்டும் என்ற கட்டாயமில்லை' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent