இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை EMIS இணையத்தில் இருந்து எவ்வாறு பிரிண்ட் எடுப்பது? HOW TO PRINT STUDENT'S TC IN EMIS WEBSITE?

வெள்ளி, 3 மே, 2019

EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி?

EMIS இணைய தளத்தில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்ளே செல்லவும்.

Students மெனுவை கிளிக் செய்து, அதில் Transfer என்ற Sub Menu வை தேர்வு  செய்யவும்.

வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

அதில் 5 / 8 ஆம் வகுப்பை தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும், தனித் தனியாக Transfer செய்து, Common Pool க்கு அனுப்பவும்.

Transfer க்கான காரணம் (5 / 8ஆம் வகுப்பாக இருப்பின்) Terminal Class என்பதை தேர்வு செய்து Transfer செய்யவும்.

மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால், உரிய காரணத்தை தேர்வு செய்யவும்.

இப்போது Transfer செய்த மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் Common Pool ல் இருப்பார்கள்.

இதன் பிறகு Students மெனுவில், Transfer Certificate தேர்வு செய்யவும்.

இதில் வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

அதில் 5 or 8 ஆம் வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்யவும்.

TC தயார் செய்ய வேண்டிய மாணவரின் வரிசையில் வலது புறம் கடையாக  உள்ள,
Generate TC என்பதை கிளிக் செய்யவும்.

இதில் 11 விவரங்கள் கேட்கப்படும்.

இதை கவனமாக உள்ளீடு செய்து Save கொடுக்கவும்.

தற்போது ஆன்லைன் TC தயார்.

ஆன்லைன் TC யில், பிழைத்திருத்தம் செய்ய இயலாது என்பதால், மாணவரை Transfer செய்யும் முன்பே, விவரங்கள் மற்றும் புகைப்படம் சரி பார்த்த பின் Transfer செய்ய வேண்டும்.


 Transfer செய்த பின், TC தயாரிக்கும் முன், கேட்கப்படும் 11 விவரங்களை பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.

Legal Size பச்சைத் தாளில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பிரிண்ட் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பம், முத்திரை இட்டு வழங்க வேண்டும்.

 TC யில்,இரண்டு பிரிண்ட் எடுத்து, மாணவருக்கு ஒரு பிரதி வழங்கி விட்டு, பள்ளிக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் 2018 -2019 கல்வியாண்டு முதல் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினை பயன்படுத்தி அச்செடுத்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent